தமிழில் பேசிய மோடி

அமெரிக்காவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பேசியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி.

இச் செயல் பார்வையாளர்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொதுக்கூட்டத்தில் முதலில் மோடி சிறிது நேரம் பேசி முடித்ததும், பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசினார். டிரம்ப் உரையை முடிக்க, மீண்டும் மோடி பேசினார். டிரம்ப் முன்வரிசையில் அமர்ந்து மோடியின் பேச்சைக் கேட்டு இரசித்தார்.

முதலில் ஆங்கிலத்தில் உரையாற்றிய மோடி, பின்னர் பேசும்போது இந்தியில் பேசினார். அவரது இந்தி உரையை கேட்ட கூட்டத்தினர் கைதட்டி மகிழ்ச்சி ஆராவாரம் செய்தனர்.

மோடி தனது பேச்சின்போது தமிழ் உள்ளிட்ட சில இந்திய மொழிகளிலும் பேசினார். தமிழில் பேசும்போது ‘எல்லாம் சவுக்கியமா?’ என்று கூட்டத்தினரை பார்த்துக் கேட்டுள்ளார். அப்போது கூட்டத்திலிருந்த திரளான தமிழர்கள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.