வவுனியாவில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி

வவுனியா மாவட்டத்தில் உதைபந்தாட்ட விளையாட்டில் திறமையான வீரர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு வவுனியா மாவட்ட பாடசாலைகள் உதைப்பாந்தாட்ட சங்கமானது பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

வவுனியா மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி நேற்று இடம்பெற்றது. 

இப்போட்டி வைரவபுளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில்  இடம்பெற்றது.  போட்டியில் 12 வயது பிரிவை சேர்ந்த  ஆண் அணிகள் கலந்துகொண்டன.

25 பாடசாலைகள் பங்குபற்றிய குறித்த போட்டி சுழற்சி முறையில் இடம்பெற்று அடுத்த சுற்றுக்காக எட்டு அணிகள் தேர்வு செய்யபட்டுள்ளது. தெரிவு செய்யபட்ட அணிகளுக்கான காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ளது. 

நிகழ்வில் மேலதிக மாவட்டச் செயலர் எஸ்.கமலதாசன், சமூக சேவையாளர்கள், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும்  கலந்துகொண்டனர்.No comments

Powered by Blogger.