மூடப்பட்ட பாடசாலைகள்

சீரற்ற வானிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றும் (24) நாளையும் (25) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை குறித்து இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, களுத்துறை, கேகாலை, காலி, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பால் விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பிரதேசங்களில் கடுமையான மண்சரிவு அவதான நிலை காணப்படுவதால் பொதுமக்கள் அது தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்படுமாறு அந்த அமைப்பு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, நாட்டின் சில கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
No comments

Powered by Blogger.