பிகில் இசை விழாவில் விஜய் அதிரடி பேச்சு

என் பேனரை கிழியுங்கள் ஆனால் என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என்று பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் அதிரடியாக பேசியுள்ளார்.

சமீபத்தில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரிய சர்ச்சை ஆனது. அதன் பிறகு விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்கு பேனர் வைக்கவேண்டாம் என ரசிகர்களை கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சுபஸ்ரீக்காக குரல் கொடுத்துள்ளார். யாரை அரெஸ்ட் செய்யவேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு பேனர் பிரிண்ட் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள்.

பேனர், கட் அவுட்லாம் கிழிச்சப்போ ரசிகர் வருத்தப்பட்ட அளவு நானும் வருத்தப்பட்டேன். என் படத்தை உடையுங்கள், பேனர்களை கிழியுங்கள். ஆனால் என் ரசிகர்கள் மேல கை வைக்காதீங்க. இவ்வாறு விஜய் பேசியுள்ளார்.


No comments

Powered by Blogger.