மட்டக்களப்பில் கொள்ளைக் கோஷ்டி குழு கைது

மட்டக்களப்பு நகர் பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளைக் கோஷ்டியினைச் சேர்ந்த 5 பேரை மைக்ரோ ரக கைத் துப்பாக்கி ஒன்றுடன் நேற்று (24) நள்ளிரவு கைது செய்ததுள்ளதாக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, முச்சக்கரவண்டி ஒன்றும் மற்றும் சில கையடக்க தொலைபேசிகளும், வீடு உடைக்கும் பொருட்களும் மீட்கப்பட்டதாக மட்டு. தலைமையக பொலிஸ் நிர்வாக பொறுப்பதிகாரி பி.எஸ்.டி. பண்டார தெரிவித்தர்.
குறித்த கொள்ளையர்கள் நேற்று இரவு சத்துருக்கொண்டான் பகுதியில் வீடு ஒன்றை கொள்ளை அடிப்பதற்காக முச்சக்கர வண்டியில் சென்றிருந்தனர். இந்த நிலையில் இவர்களை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸ் குறிறப்புலனாய்வு பிரிவினரிடம் இவர்களை ஒப்படைத்தனர்.

இதனை அடுத்து மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சுமந்த தலைமையிலான குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதில் கள்ளியங்காடு, யானத்துக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மைக்ரோ ரக துப்பாக்கினை மீட்டதுடன் 5 கையடக்க தொலைபேசிகள் முச்சக்கர வண்டி ஒன்று வீடுகளை உடைப்பதற்கான சுத்தியல் போன்ற கூரிய ஆயுதங்களை மீட்டனர். இதனை தொடர்ந்து குறித்த கைதுப்பாக்கியை கொள்ளையருக்கு விற்பனை செய்த கல்லடி கடற்கரை வீதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

இந்த கொள்ளையர்கள் சம்பவ தினம் கருவப்பங்கேணி, ஊறணி பிரதேசத்தில் நேற்று (24) இரவு கொள்ளையிட திட்டம் தீட்டியுள்ளதாகவும், பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பங்குடாவெளி, கல்லடி, கள்ளியங்காடு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் ஆயுதக் குழுக்களில் இருந்தவர்கள் எனவும் இவர்கள் களுவாஞ்சிக்குடி, செங்கலடி, மட்டக்களப்பு போன்ற பல பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் தெரிவித்த பொலிஸார் நீர்கொழும்பு மற்றும் களுவாஞ்சிக்குடி, செங்கலடி, மட்டக்களப்பு நீதிமன்றங்களில் கொள்ளை தொடர்பான வழக்குகள் இடம்பெற்று வருவதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
No comments

Powered by Blogger.