வடக்கில் சட்டத்தரணிகள் சேவைப் புறக்கணிப்பு

வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று  சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள் மற்றும் அதற்குத் துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தியே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை சட்டத்தரணி கே.சுகாஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் முல்லைத்தீவிலும் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நோக்கிப் பயணமாகியுள்ளனர்.

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்குத் துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்தப் பொலிஸார் தவறினால் மேற்கொண்டுநடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்த சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
No comments

Powered by Blogger.