அனர்த்தம் தொடர்பாக பொலிசார் தொடர்பு கொள்ள அழையுங்கள்

சீரற்ற வானிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்த நிலை தொடர்பில் அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் 2 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார்.

இந்த தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு:
011 2587229
011 2454526

விபத்துக்கள் தொடர்பில் பொது மக்கள் இந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அறிவிக்க முயும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக விஷேட பயிற்சிகளைப் பெற்ற பொலிஸ் உயிர்ப்பாதுகாப்பு அனர்த்த நிவாரண அதிகாரிகள் 50 பேரை உள்ளடக்கி 150 பேர் தற்பொழுது காலி, மாத்தறை மற்றும் களுத்துறை பொலிஸ் பிரிவுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் கடற்பிரிவிற்கு உட்பட்ட 50 வள்ளங்களும் இந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


No comments

Powered by Blogger.