கோத்தபாயவுக்கு ஆதரவு ; தேர்தல் பரப்புரைக் காரியாலயம் திறப்பு

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து  அம்பாறை நகரில் பிரதான தேர்தல் பரப்புரைக் காரியாலயம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  இக் காரியாலயம் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக முதலாவது தேர்தல் பரப்புரையும் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட அதிதிகள் தெரிவித்ததாவது,  

கோத்தபாய ஜனாதிபதியானால் நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு சிறப்பாக மேற்கொள்ளப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிலர் தனது சுயநலத்திற்காக உண்மையை மறைக்க முடியாது.

எமது மக்கள் தெளிவடைந்துள்ளார்கள் என்பதை எதிர்கால தேர்தலில் உணர்த்துவார்கள் என்றனர்.

இதில், மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பேருகொட மற்றும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க  மற்றும் சிங்கள, முஸ்லிம் மக்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் எனப் கலந்து கொண்டனர்.No comments

Powered by Blogger.