பாலாவுடன் இனையும் சூர்யா, ஆர்யா!!!

மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர் சூர்யா, ஆர்யா என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காப்பான் படத்தை தொடர்ந்து மீண்டும் பிரபல இயக்குனரின் படத்தில் சூர்யாவும் ஆர்யாவும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ’காப்பான்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், சூர்யாவும் ஆர்யாவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பாலா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரமின் மகனான துருவை வைத்து இயக்குனர் பாலா இயக்கிய ’வர்மா’ படம் டிராப் ஆனது. இதையடுத்து பாலா அடுத்த படத்துக்கு தயாராகியுள்ளார். இந்த படத்தில் ஆர்யா மற்றும் அதர்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க இருப்பதாகவும், இப்படத்தில் சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments

Powered by Blogger.