நீர் வழங்கல் அமைச்சுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம்

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மேன் பவர் நிறுவன ஊழியர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குமாறு வலியுறுத்தி இன்று (25) நண்பகல் 12 மணிக்கு பத்தரமுல்ல பெலவத்த நீர் வழங்கல் அமைச்சுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் கடந்த 5, 10, 15 மற்றும் 20 வருடங்களாக கடமையாற்றும் மேன் பவர் ஊழியர்கள் இருக்கும் போது அவர்களில் 300 பேருக்கு மாத்திரம் அரசியல் தலையீட்டினால் தொழில் வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

இதற்கு முன்னர் மின்சார சபையின் மேன் பவர் ஊழியர்கள் நடத்திய போராட்டங்களால் அவர்கள் தொழிலில் நிரந்தரமாக்கப்பட்டது போல, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் கடமையாற்றும் மேன் பவர் ஊழியர்களாகிய தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

இவ்வாறு கடந்த காலங்களில் தமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் எவையும் நிறைவேற்றப்படாமையால் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மேன் பவர் சங்கம் தெரிவித்துள்ளது.



No comments

Powered by Blogger.