சூட்சுமமாக கடைகளில் திருட்டு ; நால்வர் கைது

கடைகளில் பொருள்களைக் கொள்வனவு செய்வதைப் போன்று நடித்து, அங்கிருந்து பொருள்களை திருடுவதை வாடிக்கையாக கொண்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹரகம பிரதேசத்தைச் குறித்த நால்வரும் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பிலியந்தலை, கொஹூவல, தலங்கம, மிரியான மற்றும் கொட்டாவ ஆகிய பிரதேசங்களிலுள்ள பிரபல கடைகளுக்குள் புகுந்து பொருள்களை திருடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் மிரியான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.