பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட வவுனியா மக்கள்

பொலிஸ் நிலையத்தை  முற்றுகையிட்ட மக்களால் நேற்று வவுனியாவில் பதட்ட நிலை உருவாகியது.

வவுனியா புதிய கற்பகபுரதைச் சேர்ந்த  மக்களே  பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தை  முற்றுகையிட்டனர்.

நபர் ஒருவர் தன்னைத் தாக்கியதாகத் தெரிவித்து வவுனியா தெற்குத் தமிழ் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய  புதிய கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த   23 வயதுடைய இளைஞர் ஒருவரை  பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில், குறித்த கைது நடவடிக்கைக்கு எதிர்புத் தெரிவித்தும், தாக்கியதாகப் போடப்பட்ட முறைப்பாடு பொய் எனக் கூறியும், கைது செய்யபட்ட இளைஞரை விடுவிக்ககோரியும் கற்பகபுரம் கிராமத்தைச் சேர்ந்த எண்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முற்றுகையிட்டனர்.

இதேவேளை, இளைஞரைத் தாக்கிய பிரதேசசபை உறுப்பினரிடம் விளக்கம் கேட்கச் சென்ற இளைஞரின் மனைவியை, பிரதேசசபை உறுப்பினரும், அவரது மனைவியும் தாக்கியதாகத் தெரிவித்து பிறிதொரு முறைப்பாடும் பொலிஸ் நிலையத்தில் அளிக்கபட்டுள்ளது. 

இதனையடுத்து, பொலிஸார் பிரதேச சபை உறுப்பினரின் மனைவியைக் கைது செய்துள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததுடன், முறைப்பாடளித்த பிரதேசசபை உறுப்பினர் மற்றும் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரின் மனைவியும் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதேச சபை உறுப்பினரின் மனைவி கைது செய்யப்பட்ட பின்னர் மக்கள் பொலிஸ் நிலையத்திலிருந்து  சென்றிருந்தார்கள்.


No comments

Powered by Blogger.