கடத்தல் தொடர்பாக சந்தேகநபர்கள் கைது

களுத்துறை பிரதேசத்தில் தாய் மற்றும் மகளை கடத்திச் சென்று பணம் பெற முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் களுத்துறை, தொடங்கொட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபர்களிடம் இருந்து பொலிஸ் சீருடைகள் சிலவும், துப்பாக்கி ஒன்றும் மற்றும் கூரிய ஆயுதங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் 48 மணித்தியாலங்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

40 மற்றும் 25 வயதுகளை உடைய தொடங்கொட மற்றும் களுத்துறை பிரதேசங்களை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.No comments

Powered by Blogger.