பாராளுமன்ற வீதி மூடப்பட்டது

சமுர்த்தி அதிகாரிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொட்டாவ - பொரள்ள வீதியின், பாராளுமன்ற சந்தியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து சமுர்த்தி அதிகாரிகளின் குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து உள்ளனர்.

இதனால் பாராளுமன்ற வீதியில் இருந்து தியத உயன பகுதி வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி செல்வதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
https://www.samookam.com/


No comments

Powered by Blogger.