ஆண் குழந்தையை ஈன்றெடுத்த எமி

நடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது.. தமிழில் ஐ, 2.0 படங்களில் நடித்து பிரபலமான நடிகை எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தார். லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.

ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். பின்னர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி கூறினார். தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்திருக்கிறார். எமி ஜாக்சன் ஏற்கனவே தனக்கு ஆண் குழந்தைதான் பிறக்க போகிறது என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.