சீரற்ற வானிலையால் பலர் பாதிப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் கேகாலை போன்ற மாவட்டங்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 20,815 குடும்பங்களை சேர்ந்த 80,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை களு, கிங் மற்றும் நில்வலா ஆகிய கங்கைகளினதும் அத்தனகளு ஓயாவின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறு இருக்கையில் எந்தவொரு அனர்த்த நிலைமைக்கும் முகம் கொடுப்பதற்காக தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.இதேவேளை, தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலை நாளை (26) முதல் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

என்றாலும் மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
No comments

Powered by Blogger.