இராணுவத் தளபதியால் சைக்கிள்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு பயணம் மேற்கொண்ட இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த யாழ் மாணவர்களுக்கே இவ்வாறு  துவிச்சக்கர வண்டிகள்   வழங்கப்பட்டன.

பாடசாலைகளுக்குத் தொலைவிலிருந்து வருகை தருவதன் நிமித்தம் இவர்களது கல்வித் துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இராணுவத்தினரால் இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.


No comments

Powered by Blogger.