ஆவணங்கள் தீக்கிரை ; நீதி கோரிப் போராட்டம்

கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து  நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் பாடசாலையின்  அதிபர் அலுவலகம் உடைக்கப்பட்டு- எரிக்கப்பட்டு  மாணவர்களின் ஆவணங்கள் உள்பட பெரும்பலான ஆவணங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இது தொடர்பில்  எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில்  மேற்கொள்ளப்படவில்லை.

இதற்குத் தீர்வைப் பெற்றுத் தருமாறும்,  நிரந்திரமாக காவலாளியை நியமிக்குமாறு கோரியுமே குறித்த போராட்டம்  பாடசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

போராட்ட இடத்துக்கு கிளிநொச்சி வலயக் கல்வி பணிப்பாளர் கமலராஜன் வருகை தந்து மாணவர்களுடன் பேசிய பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது.

பின்னர் அனைத்து மாணவர்களையும் அழைத்து மாணவர்களிடம்  இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை திணைக்களமும் பொலிஸாரும்  மேற்கொண்டு வருகின்றோம்  வெகு விரைவில் இது தொடர்பான தீர்வு  பெற்றுக்கொள்ளலாம் என வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்த பின்னர் மாணவர்கள்  வகுப்பறைக்குச் சென்றனர்.


No comments

Powered by Blogger.