இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடலட்டைகள் ; இருவர் கைது

மன்னார் வளைகுடா  கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 70 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் கடத்தல்காரர் இருவர் கைது  

இந்தியா-இராமேஸ்வரத்திலிருந்து, மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த பதப்படுத்தப்பட்ட  கடல் அட்டைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்களிடமிருந்து,  ரூ 70 இலட்சம் மதிப்பிலான 350 கிலோ பதப்படுத்தப்பட்ட  கடல் அட்டைகளை  மண்டபம் மெரைன் போலிஸார் கைப்பற்றியதுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் அனைத்தும் மண்டபம் வனத்ததுறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

 தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள்  கள்ளத் தோணியில் இலங்கைக்கு கடத்தவிருப்பதாக மண்டபம் மெரைன் பொலிஸ்நிலையத்துக்கு இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மெரைன் போலிஸாரை கண்டதும் ஓம்னி வேன் ஒன்று நிற்காமல் சென்றதில் சந்தேகம் அடைந்த பொலிஸார் பாம்பன் பொலிஸ் சோதனை சாவடிக்குத் தகவல் கொடுத்தனர்.

 ஓம்னி காரை மடக்கி பிடித்த பொலிஸார் வாகனத்தை சோதனை செய்ததில்  காரில் ஏழு சாக்கு மூட்டைகளில் 350 கிலோ எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மீட்டனர்.

இராமேஸ்வரத்தை சேர்ந்த லிங்கநாதன், சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகளை பதப்படுத்தி சாக்கு பைகளில் கட்டி காரில் கொண்டு செல்வது தெரிய வந்துள்ளது.

   தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்த பொலிஸார் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள்  மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். விசாரனைக்கு பின்னர் கடல் அட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளனர். 

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு ரூபாய் சுமார் 70 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



No comments

Powered by Blogger.