ரணில் சூட்சுமமாக தீர்த்து வைப்பார் - இராதாகிருஷ்ணன் எதிர்பார்ப்பு

ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிக சூட்சுமமாக நல்ல முறையில் தீர்த்து வைப்பார் என நான் எதிர்பார்க்கின்றேன்-இவ்வாறு தெரிவித்துள்ளார்.  தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன்.

மஸ்கெலியா ரதபோட் தோட்டத்தில்  உடைந்த நிலையில் காணப்பட்ட பாலத்தை அமைப்பதற்கான அடிக்கல் நேற்று நடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

தென்கிழக்கு ஆசியாவிலேயே முதிர்ச்சி பெற்ற ஒரு அரசியல்வாதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

அவர் எப்பொழுதுமே ஐக்கிய தேசிய கட்சிக்கும், மக்களுக்கும் நல்ல விடயங்களையே மேற்கொள்வார். 

அதேபோன்று இந்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் நல்ல முடிவு ஒன்றை எடுப்பார் என எதிர்பார்க்கிறேன்-என்றார்.No comments

Powered by Blogger.