கோத்தபாயவிடம் வாக்குமூலம் ; நிராகரித்தது உயர் நீதிமன்றம்

 பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோத்தபாய ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவு விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன  நிராகரித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதியான பாமினி வியாங்கொட மற்றும் பேராசிரியர் சந்தரகுப்த தேநுவர ஆகியோர் தாக்கல் செய்திருந்த முறைப்பாடு தொடர்பில் அறிக்கையிட்டு, குற்றப் புலனாய்வு பிரிவினரால் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது

அமெரிக்கக் குடிமகனாக இருந்துகொண்டு, தேர்தல் சட்டம் மற்றும் மக்கள் சட்டம் என்பனவற்றை மீறி, அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டு கோத்தபாயவுக்கு எதிராக  குற்றப் புலனாய்வு பிரிவினர் கடந்த மாதம் 15 ஆம் திகதி முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.

பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு  கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குற்றப் புலனாய்வு பிரிவு விடுத்த கோரிக்கையை பரீசீலனைக்கு உட்படுத்திய நீதவான், ஆள்களைப் பதிவுசெய்யும் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு மற்றும் குடிவரவு, குடியகழ்வுத் திணைக்களம் என்பனவற்றிடம், விசாரணைகளுக்கு அமைவான ஆவணங்களைப் பெற்று அந்த விடயங்களை மன்றுக்கு அறிக்கைப்படுத்துமாறு கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.