ஒரே மேடையில் கைகோர்த்த டிரம்ப்-மோடி

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் அமெரிக்க இந்தியர்கள் நடத்திய நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர்.

இந்த பங்கேற்பு  இருநாட்டு உறவின் அதிகரித்து வரும் வியூக முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என்று அமெரிக்காவின் முன்னணி பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இதுதொடர்பாக  எழுதியுள்ளதாவது,

மோடியும், டிரம்பும் ஒரே மேடையில் கூட்டாக தோன்றியது, இந்திய-அமெரிக்க உறவின் அதிகரித்து வரும் வியூக முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. 

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு உலகின் மாபெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன. இதை டிரம்ப் உறுதி செய்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், இந்தியர்களின் வாக்குகள் டிரம்புக்கு அதிகமாகக் கிடைக்கவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில், அவர்களின் பெருமளவு வாக்குகளைப் பெற்று விடலாம் என்று டிரம்ப் கருதுகிறார்.

21 ஆம் நூற்றாண்டில் இரு நாடுகளின் வளத்துக்கும் அமெரிக்க இந்தியர்களின் பங்களிப்பு முக்கியமானது. எனவே, இந்தியர்களுடன் இணைந்து செயல்படுவதன் பலன்களை டிரம்ப் புரிந்து கொண்டுள்ளார்-என்றுள்ளது.

இதேபோல், மற்றொரு முன்னணிப் பத்திரிகையான ‘தி நியூயோர்க் டைம்ஸ்’ கூறியிருப்பதாவது,

இருவரும் தத்தமது நாடுகளை மீண்டும் மாபெரும் தேசமாக மாற்றிக் காட்டுவதாக வாக்குறுதி அளித்தவர்கள். மத, பொருளாதார, சமூக தளங்களில் பதற்றத்தை உண்டாக்கியவர்கள். ஆனால், மோடியை பக்கத்தில் வைத்துக்கொண்டாலும், இந்தியர்களின் வாக்குகளை டிரம்ப் பெறுவது எளிதல்ல. அவர்கள் ஜனநாயக கட்சிக்குத்தான் வாக்குப் போடுவார்கள்.

‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது,

டிரம்பின் ஜனாதிபதி பதவி செயல்பாடுகளை ஆதரித்து மோடி பேசியுள்ளார். இதன்மூலம் அமெரிக்காவுடனான பதற்றத்தை தணிக்கும் வியூகத்தை மோடி கடைபிடித்துள்ளார் என்றுள்ளது.



No comments

Powered by Blogger.