தங்க நகை திருடன் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்க நகை திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் ராகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர் ராகம பட்டுவத்த பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபராவார்.

இவர் ராகம, கடவத்தை மற்றும் கனேமுல்ல ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு தங்க நகை திருட்டில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் இன்று (23) முற்படுத்தப்படவுள்ளார்.


No comments

Powered by Blogger.