எவர் கிரீன் ஸ்டார் பட்டம் பெற்ற நடிகை;மீனா

எவர்கிரீன் ஸ்டார் பட்டம்… குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடித்த நடிகை மீனா, எவர்க்ரீன் ஸ்டார் பட்டம் பெற்றிருக்கிறார்.

பொதுவாக பெரிய நடிகர்கள் தான் தங்கள் பெயருக்கு முன்னால் அடைமொழி போட்டுக்கொள்வார்கள். நடிகைகளில் இந்த வழக்கம் கிடையாது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் மீனாவுக்கு இப்போது எவர்கிரீன் ஸ்டார் என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

என் ராசாவின் மனசிலே படத்தில் ஹீரோயினாக அறிமுகமானது முதல் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டாலும் டைட்டில் கார்டில் எந்தப் பட்டமும் இதுவரை போட்டுக்கொள்ளவில்லை.

சினிமா பயணத்தை முடித்துவிட்டு, சில சீரியல்களில் நடித்தவர், இப்போது வெப் சீரிஸ் பக்கமும் வந்து இருக்கிறார். `கரோலின் காமாட்சி’ என்ற அந்த தொடரின் போஸ்டரில் `எவர்க்ரீன் ஸ்டார்’ என்று மீனாவை குறிப்பிட்டுள்ளனர். பட்டத்தை மீனாவுக்கு வழங்கிய இயக்குநர் வெர்னிக் கூறியிருப்பதாவது:-

அவங்களோட அனுபவத்துக்கு இந்த பட்டம் எல்லாம் சாதாரணம்னுதான் நினைக்கிறேன். அதனாலதான் வெப் சீரிஸ் என்ட்ரியில அவங்களை கவுரவப்படுத்தற மாதிரி ஒரு பட்டம் கொடுக்கணும்னு ஆசைப்பட்டோம். பல பட்டங்களை சூட்டி பார்த்து கடைசியில `எவர்க்ரீன் ஸ்டார்’ பட்டத்தை தேர்வு செய்தோம்.

ஆனா, இந்த பட்டத்துக்கு அவங்ககிட்ட சம்மதம் வாங்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. முதல் தடவையா பட்டம் குறித்து அவங்ககிட்ட சொன்னதும் சத்தமாக சிரிச்சிட்டாங்க. ’இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா? சினிமாவுல கடைசிவரை இருக்கிறவங்கதான் இப்படியெல்லாம் போட்டுக்கணும்.

ரஜினி, கமல் சார் காதுலெல்லாம் இந்தப் பட்டம் விழுந்தா அவங்க ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்னு எங்களையே கேட்டுச் சிரிக்கிறாங்க. ஆனாலும் நாங்க தொடர்ந்து வற்புறுத்தியதால் கடைசியில் சம்மதம் கொடுத்தார்’ என்றார்.
No comments

Powered by Blogger.