ரவூப் ஹகீமை நீக்க ரணில் முடிவு


இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹகீமை ஐ.தே.கட்சியில் இருந்து நீக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முடிவூ செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முடிவூக்கமைய அண்மையில் நடைபெற்ற ஐ.தே.மு உடைய கட்சியின் தலைவர் கூட்டத்திற்கு அவர் அழைக்கப்படவில்லை.

முன்னயை அமைச்சரவை கூட்டத்தில் பிரதமரை ஹகீம் கண்டித்ததை தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு ஊடகங்களுக்கு அவர் தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து இந்த முடிவூ எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை ஐ.தே.மு இன் எந்த ஒரு கலந்துரையாடலிற்கும் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார் என முடிவூ செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இருப்பினும் அமைச்சர் ஹகீம் பிரதமரை சந்தித்து வருத்தம் தெரிவித்ததாகவூம் நேற்று பிரதமருடன் ஒருசில விழாக்களில் பங்கேற்றதாகவூம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.