மன்னார் சூசையப்பர் ஆலயத்தில் வாசப்பு நிகழ்வு

மன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பர் வாசப்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நிகழ்வு, அருட்தந்தை ஜேசுராஜாவின் ஏற்பாட்டில் அன்னாவியார் கிறிஸ்ரியன் டயஸ் தலைமையில்  தாழ்வுபாடு புனித வளனார் பாடசாலையில் இடம் பெற்றது.

தாழ்வுபாட்டு பங்கு மக்களால் நடத்தப்படும் குறித்த வாசப்பபு நிகழ்வு 
நான்கு வருடங்களுக்கு பின்னர் நேற்று இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில், மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ, மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் விக்டர் சோசை, நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ்நிர்மல நாதன், மன்னார் பிரதேச செயலர் கனகாம்பிகை சிவசம்பு, மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹீர், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் ராதா பெர்னாண்டோ, மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் பங்கு மக்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.
No comments

Powered by Blogger.