குடிதண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

வவுனியா வாரிக்குட்டியூரில் அமைக்கபட்ட குடிதண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் இன்றையதினம் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

வாரீக்குட்டியூர் மாதர் கிராம அபிவிருத்தி  சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் 15 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், பிரதேசசபை உறுப்பினர் சுஜீவன், தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், கிராம அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.