கொள்ளையர்கள் கிணற்றில் வீழ்ந்து பலி

யாழ்ப்பாணம் நகரில் வீடு ஒன்றுக்குள் கொள்ளையிடும் நோக்குடன் நுழைந்திருப்பார் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் அந்த வீட்டின் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

அவர் கிணற்றுக்குள் வீழ்ந்த சத்தம் கேட்டதை அடுத்து கிணற்றைச் சென்று பார்த்த வீட்டு உரிமையாளர், பொலிஸாரை அழைத்துவரச் சென்றுள்ளார். எனினும் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் செல்ல தாமதித்ததனால் கிணற்றுக்குள் வீழ்ந்தவர் உயரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், சிறிதர் தியேட்டருக்கு பின்புறமாக யாழ். வீதியில் இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில், சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.No comments

Powered by Blogger.