இராணுவ சிப்பாய் நீரில் மூழ்கி பலி

ஹசலக, ரன்தெணிகல நீர்த்தேக்கத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவ சிப்பாய் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நீர்த்தேக்கத்தின் கீழ் அணையை சோதனையிட்டதில் சுமார் 20 அடி ஆழத்தில் இருந்து அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

23 வயதுடைய மாவனெல்லை, அலுத்நுவர பிரதேசத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஹசலக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments

Powered by Blogger.