ஜனாதிபதித் தேர்தல் ; கட்டுப்பணம் செலுத்தினார் கோத்தபாய

ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் சார்பில் நேற்றுக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் சுபநேரமான நண்பகல் 12.14 மணிக்குக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ உட்பட மகிந்த அணியின் முக்கியஸ்தர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் செப்டெம்பர் 19 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி மதியம் 12 மணிவரை கட்டுப்பணம் செலுத்த முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாவையும், சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் 75 ஆயிரம் ரூபாவையும் கட்டுப் பணமாக தேர்தல்கள் செயலகத்தில் செலுத்த வேண்டும்.

இதேவேளை, ஒக்டோபர் 7ஆம் திகதி , வேட்புமனுத் தாக்கல் இடம்பெறும். அன்று காலை 9 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.