திருநங்கைகளுக்கு மிகப் பெரிய மரியாதை


நாடோடிகள் 2 படம் வெளியான பின், திருநங்கைகள் மீது மிகப் பெரிய மரியாதை சமூகத்தில் ஏற்படும் என இயக்குநர் சசிகுமார் கூறியிருக்கிறார்.

விடயம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

சமுத்திரகனி, எப்போதும் சமூகத்தின் மீதான தன்னுடைய பார்வையை செலுத்திக் கொண்டே இருப்பார். இப் படத்திலும் அதை செய்திருக்கிறார். திரு நங்கைகளும் சமூகத்தின் ஒரு அங்கம் தான் என்பதை இந்தப் படத்தின் மூலம் உணர்த்தி இருக்கிறார். 

படத்தில் நமீதா என்ற கேரக்டர் வருகிறது. திருநங்கையாக இருக்கும் அந்த கேரக்டர், சமூகத்தில் திருநங்கைகள் சந்திக்கும் சங்கடங்களையும், வலிகளையும் மேற்கோள் காட்டி, படம் எடுத்திருக்கிறார். படம் வெளியான பின், சமூகத்தில், திரு நங்கைகளுக்கு இருக்கும் மதிப்பு நிச்சயம் கூடும்-என்றார்.

நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை பதினொரு ஆண்டுகளுக்குப் பின்,  இயக்கி இருக்கிறார் இயக்குநர் சமுத்திரகனி. சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், பரணி, நமோ நாராயணா, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.  


No comments

Powered by Blogger.