திலீபனின் நினைவேந்தல் ; வவுனியாவில் நடைபயணம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இன்றையதினம் காலை ஆம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகிய நடைபயணம், தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இணைந்து  யாழ்பாணத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவு திடலை சென்றடையவுள்ளது. 

ஊர்தியில் அமைக்கபட்டிருக்கும் திலீபனின் திருவுருவப் படத்திற்கு காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் மலர்மாலை அணிவிக்கபட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், இனஅழிப்பு மற்றும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணையை மேற்கோள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடைபயணம் முன்னெடுக்கப்படுகிறது. 

இதில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலர் செ,கயேந்திரன், மற்றும் சட்டதரணி சுகாஸ்,  உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  செ.மயூரன், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து‌ கொண்டனர்.

நடைபயணம் வவுனியா பஜார் வீதியை நெருங்கிய வேளை ஊர்வலத்தை தடுத்த பொலிஸார் ஒலிபெருக்கிப் பாவனையை நிறுத்துமாறு உத்தரவிட்ட நிலையில், சற்று நேரம் குழப்பம் ஏற்பட்டிருந்தது. ஒலி பெருக்கி பாவனை இல்லாமல் பயணத்தை மேற்கொள்ளுமாறு பொலிஸாரால் பணிக்கபட்டது. 

அதன்பின்னர் புதிய பேருந்து நிலையம் வரைக்கும்  ஒலி பெருக்கி பாவனை இல்லாமல் நடைபயணம் தொடர்ந்துள்ளது.






















No comments

Powered by Blogger.