தங்கத் திருட்டு - சிக்கிய திருடன்

நெலுவ நகரில் உள்ள நகைக் கடை ஒன்றிற்கு வந்த ஒருவர் ஊழியரை ஏமாற்றி 40000 ரூபாய் பெறுமதியான தங்க மோதிரம் ஒன்றை திருடிச் சென்றுள்ளார்.

குறித்த நகை கடைக்கு வந்த நபர் தங்க மோதிரம் ஒன்றை வாங்குவதற்காக அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் அது தொடர்பில் விசாரித்துள்ளார்.

தெரிவு செய்த மோதிரத்தை கொள்வனவு செய்ய பணம் போதாது என்பதால் அருகில் உள்ள வங்கிக்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறி குறித்த நபர் நகை கடையில் இருந்து சென்றுள்ளார்.

இதன்போது நகை பெட்டியில் இருந்த மோதிரம் ஒன்று காணாமல் போயிருந்ததை அவதானித்த ஊழியர் முகாமையாருக்கு தெரிவித்து சிசிரிவி கெமராவை சோதனையிட்டு போது குறித்த நபர் மோதிரம் ஒன்றை திருடிச் செல்வது பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடரபில் நெலுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.No comments

Powered by Blogger.