பிகிலை எதிராக போராட்டம்


பிகில் படத்திற்கு எதிராக வியாபாரிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு எழுந்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது பிகில். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.
கடந்த வாரம் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஒரு பிரபல கல்லூரியில் நடந்தது.

இதில் விஜய் பேசியது குறித்து இப்போதும் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நேரத்தில் படத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர் வியாபாரிகள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இறைச்சி வெட்டும் முட்டுக்கட்டை மீது செருப்பு காலை விஜய் வைத்துள்ளதாகவும் இந்த போஸ்டர் தங்களது தொழிலை அவமதிக்கும் வகையில் இருப்பதாக இறைச்சி கடை உரிமையாளர்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.