கொட்டும் மழையிலும் பணிப் பகிஷ்கரிப்பு

இன்று (24) முதல் தொடர்ச்சியான பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஶ்ரீலங்கா நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சில் நேற்று (23) பிற்பகல் வரை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் இவ்வாறு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் புஹாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மேலும் பல தொழிற்சங்கங்கள் இந்த பணிபகிஷ்கரிப்பில் இணையவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, அரச நிர்வாக அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு நாளை (25) தொடக்கம் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இன்றைய தினத்தினுள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் நாளைய தினம் தொடக்கம் தொடர்ச்சியான பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த குழுவின் பொதுச் செயலாளர் எச்.ஏ.எல்.உதயசிறி தெரிவித்தார்.





No comments

Powered by Blogger.