ஜனாதிபதி ஆணைக்குழுவில் சஜித் - அகில விராஜ் மற்றும் சுவாமிநாதன்

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு  முன்னிலையில் அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் ஆஜராகவுள்ளனர்.

 இந்த நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.எம் சுவாமிநாதனும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதியில், இடம்பெற்ற சம்பவம் தொடர்பான முறைப்பாட்டுக்கு அமையவே, நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதனிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

வீடமைப்பு அதிகார சபைக்கு சட்ட விரோதமான முறையில் ஆட்களை சேர்த்துக் கொண்டமையின் ஊடாக ஏற்பட்ட மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அமைச்சர் சஜித் பிரேமதாஸ  ஆஜராகவுள்ளார்.

இதேநேரம், பாடசாலை மாணவர்களுக்கான சீருடைக்கு பதிலாக, வவுச்சர்களை வழங்குதல் மற்றும் டெப் கணினிகளை வழங்குவதில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான முறைப்பாட்டுக்கு அமைய, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.


No comments

Powered by Blogger.