சட்டவிரோத மீன்பிடி ; மீனவர்கள் நால்வர் கைது

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட  மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை புல்மோட்டை – கொக்கிளாய் களப்பில்  மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரே கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

கிழக்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான சிப்பாய்கள் சிலர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், நீர்கொழும்பு, புத்தளம் மற்றும் கொக்கிளாய்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.