கஞ்சா விற்பனை செய்த இராணுவ சிப்பாய் கைது

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்ட உடூகாவ பிரதேசத்தில் கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் சுமார் ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய குறித்த இராணுவ சிப்பாய் உடூகாவ ஜயவிக்கிரமபுர பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

முல்லைத்தீவு இராணுவ முகாமில் பணிபுரியும் இவர், விடுமுறைக்காக வந்திருந்த போது இவ்வாறு கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.

நீண்ட காலமாக குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறைக்கு வீடு வரும் போது கேரள கஞ்சா விற்பனை செய்து அதனை மேலதிக வருமானமாக பயன்படுத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.No comments

Powered by Blogger.