இந்தியக் கோடீஸ்வரர் லண்டனில் கைது

கைது செய்யப்பட்ட  கோடீஸ்வரர் ஒருவரின் வீட்டிலிருந்த 173 ஓவியங்கள் ஏலம் விடப்பட்ட நிலையில், தற்போது 13 ஆடம்பர கார்களை ஏலம் விட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 கோடி ரூபாய் கடன் ஏய்ப்புச் செய்து விட்டு வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த நிரவ்மோடி என்பவர், லண்டனின் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

கைதான  குறித்த நபர் நீதிமன்றத்தில்  பிணை வழங்குமாறு மனு அளித்திருந்தார். ஆனால் அவரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் நிரவ் மோடியின் வரியின் எஞ்சியதை வசூலிக்க, அவர் சேகரித்து வைத்திருந்த 173 ஓவியங்கள் கடந்த வாரம் ஏலம் விடப்பட்டது.

இந்த ஓவியங்களை 54 கோடி ரூபாவுக்கு வருமான வரித்துறை ஏலம் விட்டது.
  
இந்த நிலையில், நிரவ் மோடியின் ரோல்ஸ் ராய்ஸ், போர்ச்சே, மெரிசிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட 13 விலையுயர்ந்த சொகுசுக்‌ கார்களை ஏப்ரல் 18 ஆம் திகதி அமலாக்க துறை ஏலம் விடத் திட்டமிட்டுள்ளது.

நன்றாக இயங்கும் நிலையில் உள்ள இந்தக் கார்களை ஏலம் விடுவதன் மூலம் சில கோடி ரூபாய்களை வசூலிக்க முடியும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த ஏலம் ஆன்லைன் மூலம் நடப்பது குறிப்பிடத்தக்கது.No comments

Powered by Blogger.